உள்ளூர் செய்திகள்

சித்தரம்பூரில் பழங்கால 7அடி உயர முதுமக்கள்தாழி கண்டெடுப்பு

Published On 2025-08-08 15:51 IST   |   Update On 2025-08-08 15:51:00 IST
  • கண்மாயின் வடிகால் பகுதியில் பொதுமக்கள் மண் எடுத்தனர்.
  • மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா சித்தரம்பூர் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பயன்படுத்த, அதே பகுதியில் உள்ள கண்மாயின் வடிகால் பகுதியில் பொதுமக்கள் மண் எடுத்தனர்.

குறிப்பிட்ட ஆழத்தில் மண் எடுக்கையில் சுமார் 7 அடிக்கு மேல் உயரமான குருது போன்று காணப்பட்டது. இதில் ஒரு தாழி உடைந்த நிலையில் மற்றொன்று முழுமையாக காணப்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் கீழடியை போன்று எங்கள் பகுதியில் முதுமக்கள்தாழி போன்ற பழங்காலத்து பொருட்கள் காணப்படுகிறது. இது தொடர்பாக தொல்லியல் துறை மூலம் முழுமையான ஆய்வு நடத்தி மறைந்திருக்கும் மற்ற தாழிகளையும் கண்டுபிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News