உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சின்னமனூரில் இருந்து மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு 25 பஸ்களில் பயணம்

Published On 2023-08-19 13:18 IST   |   Update On 2023-08-19 13:18:00 IST
  • மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அணி, அணியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னமனூர்:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கி ணங்க மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அணி, அணியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி தேனி முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் பிச்சைக்கனி முன்னிலையில் சின்னமனூர் நகர அ.தி.மு.க. சார்பாக 25 பஸ்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரை மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றனர்.

சின்னமனூர் நகர அவைத்தலைவர் ராமர், மாவட்ட பிரதிநிதி மதிவாணன், வக்கீல் பிரிவு பொறுப்பாளர் ஜெகன்ராஜ், நகர்மன்ற தலைவர், நகர கிளைச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News