உள்ளூர் செய்திகள்

சீமை கருவேல மரங்கள்.

சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும்

Published On 2023-03-02 09:26 GMT   |   Update On 2023-03-02 09:26 GMT
  • சீமைக் கருவேலம் மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும்.
  • ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது.

திருத்துறைப்பூண்டி:

தமிழக முதலமைச்சருக்கு திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

சீமைக் கருவேலம் மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும். மெக்சிகோ, கரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா போன்றவற்றை தாயகமாகக் கொண்டவை.

பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950 களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த 60 ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது,

கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.

தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

இவை ஆழமாக வேர் விட்டு உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் தண்ணீர் செல்வதை தடைசெய்கிறது.

இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன.

இதன் வெப்பத்தால் மழையின் அளவை வெகுவாக குறைத்துள்ளது. மற்ற மரங்கள் போல் ஆக்ஸிஜனை வெளியிடுவதில்லை.

எனவே கருவேல மரங்களை மாவட்டந்தோறும் அரசு துறைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளை கொண்ட மக்கள் இயக்கம் மூலம் தொடர் அழிப்பு பணி செய்தால் மட்டுமே முற்றிலுமாக அழிக்க முடியும்.

எனவேஇதை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News