திண்டிவனம் வகாப் நகரில் சிறுவர் பூங்கா திறப்பு விழாவில் ஊஞ்சல் விளையாடிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
திண்டிவனத்தில் ரூ.43 லட்சம் மதிப்பில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா: ஊஞ்சல் விளையாடிய அமைச்சர்
- குழந்தைகள் விளையாடும் பூங்காவில் உள்ள ஊஞ்சலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஊஞ்சல் விளையாடினார்.
- தி.மு.க கவுன்சி லர் சந்திரன், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 43 லட்சம் மதிப்பில் திண்டிவனம் வகாப் நகரில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடை பெற்றது. இந்த பூங்காவை சிறுபான்மை துறை அமை சசர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார். இதனையடுத்து குழந்தைகள் விளையாடும் பூங்கா வில் உள்ள ஊஞ்சலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஊஞ்சல் விளையாடினார்.
இதில் நகர மன்ற தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் தி.மு.க நிர்வாகிகள், நகரா ட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. சீதா பதி சொக்கலிங்கம், ஒல க்கூர் சேர்மன் சொக்க லிங்கம், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், தி.மு.க மாவட்ட பொருளா ளர் வழக்கறிஞர் ரமணன், அரசு ஒப்பந்ததாரர் நந்தா, கவுன்சிலர் ஜனார்த்தனன், தி.மு.க நகர துணை செயலா ளர் ஓவியர் கௌதமன், தி.மு.க கவுன்சி லர் சந்திரன், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.