பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் முதல்-அமைச்சர் - ராஜா எம்.எல்.ஏ. பேச்சு
- குழந்தைகள் அனைவரும் படிப்பு மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தனி கவனம் செலுத்த வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.
- சங்கரன்கோவில் பகுதியில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள சூழ்நிலை உள்ளது என்று ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு விளை யாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயமாதா பள்ளியில் நடந்தது.
விளையாட்டு உபகரணங்கள்
நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் நகர செய லாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி முன்னிலை வகித்தனர். இதில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் மீது அதிக பிரியம் மிகுந்த அக்கறை உள்ளவர். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் குழந்தைகளை கண்டால் வாகனத்தில் இருந்து இறங்கி குழந்தைகளிடம் கலந்துரை யாடல் செய்துவிட்டு தான் செல்வார்.
நிலத்தடி நீர்
மேலும் குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல முத்தான திட்டங்களை அறிவித்து வருகின்றார். குழந்தைகள் அனைவரும் படிப்பு மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.
சங்கரன்கோவில் பகுதியில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள சூழ்நிலை உள்ளது. எனவே மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் மரக்கன்றுகளை நட வேண்டும். இதனால் நிலத்தடி நீர் உயரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
தொடர்ந்து குழந்தை களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி நிர்வாகிகள் ஆரோக்கிய மேரி, ஜோசப்சின்னத்துரை, நகர அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், இளைஞர் அணி சரவணன், மாணவரணி கார்த்தி, அப்பாஸ்அலி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, நகராட்சி கவுன்சிலர்கள் ராஜா ஆறுமுகம், புஷ்பம், விஜயகுமார் மற்றும் யோசேப் செல்வராஜ், கே.எஸ்.எஸ். சங்கர், தாஸ், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.