உள்ளூர் செய்திகள் (District)

சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

Published On 2023-01-05 07:40 GMT   |   Update On 2023-01-05 07:40 GMT
  • சாலை விரிவாக்க பணிகள் ரூ.40 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
  • உதவிப் பொறியாளர், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

பல்லடம் :

திருப்பூர் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில், பல்லடம் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், வடிகால் கட்டுதல், தடுப்புச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட சாலை விரிவாக்க பணிகள் ரூ.40 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை சென்னை தலைமை பொறியாளர் சந்திரசேகர் ( கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சாலை விரிவாக்க பணிகளை தரமாகவும், அதே நேரத்தில் விரைவாகவும், பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர், தரக் கட்டுப்பாடு கோட்ட பொறியாளர், பல்லடம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News