உள்ளூர் செய்திகள்

கறிக்கோழி விலை மேலும் ரூ.8 சரிவு

Published On 2023-03-28 15:19 IST   |   Update On 2023-03-28 15:19:00 IST
  • பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
  • இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்துக்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த கறிக்கோழிகளுக்கு பல்லடத்தில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழியின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோ சிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை 8 ரூபாய் குறைப்பதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 102 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 94 ரூபாயாக குறைக்கப் பட்டது. அதேபோல முட்டை கோழி உற்பத்தி யாளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முட்டை கோழி விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 67 ரூபாயில் இருந்த முட்டை கோழிவிலை 60 ரூபாயாக சரிந்தது. முட்டை விலை யில் எந்த மாற்றமும் செய்யாமல் 450 காசுகளாக நீடிக்கிறது.

Tags:    

Similar News