உள்ளூர் செய்திகள்

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் - நாளை தொடங்குகிறது

Published On 2023-01-31 16:38 IST   |   Update On 2023-01-31 16:38:00 IST
  • கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி சிறப்பு முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் நடைபெற உள்ளது.
  • முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

திருப்பூர்:

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை இருவாரங்கள் கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி சிறப்பு முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையங்களில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மூலமாக மேற்படி முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News