உள்ளூர் செய்திகள்

நாளை மறுநாள் சதுர்த்தி விழா விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரிப்பு

Published On 2022-08-29 10:00 GMT   |   Update On 2022-08-29 10:00 GMT
  • சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
  • 3-ம் நாள் நீ ர்நிலைகளில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும்.

சேலம்:

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபடுவது வழக்கம். மேலும் கொழுக்கட்டை, அவல், சுண்டல், சக்கரை பொங்கல், கரும்பு, பழ வகைகளை வைத்து படையலிடுவார்கள், 3-ம் நாள் நீ ர்நிலைகளில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும்.

விநாயகர் சிலைகள்

விநாயர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் தற்போது விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டி உள்ளது. சேலத்தில் சீலநாயக்கன்பட்டி, அஸ்தம்பட்டி, குரங்குச்சாவடி, உத்தமசோழபுரம், வின்சென்ட், கடை வீதி, குகை, செவ்வாய்ப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதில் அரை அடி முதல் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ைவக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை பொது மக்கள்அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். 100 ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை அதிகரிப்பு

குறிப்பாக லிங்க விநாயகர், ராஜ அலங்காரம், நாராயண விநாயகர், நாகலிங்கம், கஜமுகம், ருத்ரமூர்த்தி, ராஜகணபதி, சயனவிநாயகர் உள்பட பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டி உள்ளது.

மேலும் விநாயகர் சதுர்த்தி பூைஜக்கு தேவையான அவல், கொண்டை கடலை, பழங்கள்,அரிசி, சர்க்கரை, பூக்கள் விற்பனையும் அதிகரித்தது. இதனால் பூக்கள் விலை அதிகமாக இருந்தது . ஆனால் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொருட்கள் வாங்க பொது மக்கள் கடை வீதிகளில் திரண்டனர். இதனால் கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியது.  

Tags:    

Similar News