கோப்பு படம்.
சுருளி அருவியில் சாரல் விழா கலை நிகழ்ச்சி, விைளயாட்டுப் போட்டிகள்
- விழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சியாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
- சுருளி ப்பகுதியில் உள்ள பூங்காவில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்து றை சார்பில் சுருளி சாரல் திருவிழாவை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கடந்த 29-ந் தேதி தொடங்கி வைத்தார்.
6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சியாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும் மஞ்சப்பையின் முக்கியம் கருதி சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.
கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வெள்ள பாண்டியன் நாட்டுக்குழுவின் கிராமிய கலைநிகழ்ச்சிகள், ஆணைமலையான்பட்டி, அணைப்பட்டி, கோம்பை, சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் புலித்தேவன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் சார்பில் சிலம்பம் கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுத்துறையின் சார்பில் பலூன் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி களும் சிறப்பாக நடை பெற்றது. சுருளி ப்பகுதியில் உள்ள பூங்காவில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளா ண்மைத்துறை, தோட்ட க்கலைத்துறை, சமூக நலத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்க ப்பட்டிருந்த விழி ப்புணர்வு கண்காட்சிகளை சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
மேலும் விழாவில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில், மதுரை கோவிந்தராஜன் கலை குழுவின் கலைநிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நாய்கள் கண்காட்சி, விளையாட்டுத்துறையின் சார்பில் இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளது.