உள்ளூர் செய்திகள்

தையல் பயிற்சி பெற்ற பெண்ணுக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.

இலவச தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்களுக்கு சான்றிதழ்

Published On 2022-07-08 09:02 GMT   |   Update On 2022-07-08 09:02 GMT
  • பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் தொழில் பயிற்சி பெற்று மறுவாழ்வு பெற இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • பயிற்சியில் கர்ச்சீப், பாவாடை, சுடிதார் வகைகள், உட்பட பல்வேறு வகையான ஆடைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் வளர் இளம் பெண்களான குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் தொழில் பயிற்சி பெற்று மறுவாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது.

தையல் பயிற்சி மாணவி வின்சா வரவேற்று பேசினார். பயிற்சி நிறைவு விழாவிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர். எஸ். ஜே. கென்னடி தலைமை தாங்கினார். தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்களுக்கு சான்றிதழை வழங்கி வாழ்த்தி பேசினார்.

லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி முன்னிலை வகித்தார். இப்பயிற்சி தொடர்ந்து 3 மாதம் நடைபெற்றது. இதில் 13 வயது முதல் 20 வயது வரையுள்ள குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் 17 பேர் பயிற்சி பெற்றனர்.

இப்பயிற்சியில் கர்ச்சீப், தலையணை உறை, நிக்கர், பெட்டிகோட், பாவாடை வகைகள், மாடல் ஹவுன் வகைகள், மாடல் பிளவுஸ் வகைகள், சுடிதார் வகைகள், உட்பட பல்வேறு வகையான ஆடைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

தையல் பயிற்சி மாணவி அபர்ணா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்கள், பெற்றோர்கள் , மதர் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News