உள்ளூர் செய்திகள்

கடலூரில் கிரிக்கெட் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வழங்கினார். அருகில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தலைவர் பாஸ்கர், செயலாளர் கூத்தரசன் உள்ளனர்.

கடலூரில் கிரிக்கெட் பயிற்சி பெற்ற 120 வீரர்களுக்கு சான்றிதழ்

Published On 2022-06-15 14:14 IST   |   Update On 2022-06-15 14:14:00 IST
  • கடலூரில் கிரிக்கெட் பயிற்சி பெற்ற 120 வீரர்களுக்கு சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வழங்கினார்
  • கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் கடந்த 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

கடலூர்:

கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் கடந்த 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 120 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல் பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கி னார். மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சங்க மாவட்ட செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.

Tags:    

Similar News