உள்ளூர் செய்திகள்

திறன் பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-09-13 15:13 IST   |   Update On 2022-09-13 15:13:00 IST
  • கணினி பயிற்சி, அழகுகலை பயிற்சி உள்ளிட்ட திறன் பயிற்சிகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.
  • பயிற்சி பெற்ற அனைத்து பெண்களுக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தின் மூலம் மீட்கப்பட்ட சிறுமிகள், மற்றும் பள்ளி இடையில் நின்ற பெண் குழந்தைகளுக்கும், மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் கணினி பயிற்சி, அழகுகலை பயிற்சி உள்ளிட்ட திறன் பயிற்சிகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து. பயிற்சி பெற்ற அனைத்து பெண்களுக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ஆராதனை அறக்கட்டளை நிறுவனர் ராதா வரவேற்றார்.

ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிர மணியன், மற்றும் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கி பேசினர்.

Tags:    

Similar News