உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் தொழிலாளர்களின் செல்போன் திருட்டு

Published On 2022-08-08 09:51 GMT   |   Update On 2022-08-08 09:51 GMT
  • நிறுவனத்தின் எதிரே உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
  • அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து செல்போன்களை திருடி செல்வதாக புகார் தெரிவித்தனர்.

கோவை:

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி மேலாளராக வேலை செய்து வருபவர் லட்சுமணராஜ் (வயது 56).

இவர் வேலை செய்யும் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் நிறுவனத்தின் எதிரே உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் யாரோ அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து செல்போன்களை திருடி செல்வதாக புகார் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த பகுதியில் இரவு நேரத்தில் கண்காணிக்க முடிவு செய்தனர். அதன்படி சுப்பிரமணி மற்றும் யுவராஜ் என்பவர்களை காவல் பணியில் ஈடுபடுத்தினர்.

அவர்கள் இரவு ரோந்து சென்றபோது வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் ஒருவர் செல்வதை பார்த்தனர். உடனே காவலர்கள் 2 பேரும் அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த மர்ம நபர் அறையில் இருந்த 3 செல்போன்களை எடுத்து அங்கிருந்து தப்பி சென்றார்.

பின்னர் அவர்கள் அந்த மர்ம நபரை தேடி சென்றனர். அப்போது அந்த மர்ம நபர் அதே பகுதியை சேர்ந்த அபூகுரைரா (21) என்பது தெரியவந்தது. காவல் பணியில் ஈடுபட்டவர்கள் மர்ம நபர் குறித்து மேலாளர் லட்சுமணராஜிடம் கூறினர். இவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பதுங்கி இருந்த அபூகுரைராவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News