உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு காமிராக்களை டி.எஸ்.பி. மாயவன் தொடங்கி வைத்தார். அருகில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.

தென்திருப்பேரையில் தெருக்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்

Published On 2023-04-03 14:26 IST   |   Update On 2023-04-03 14:26:00 IST
  • டி.எஸ்.பி. மாயவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் காணிப்பு காமிராக்களை தொடங்கி வைத்தார்.
  • ஏற்பாடுகளை மகரபூஷணம், லெட்சுமி நாராயணன மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை பேரூராட்சிக்குட்பட்ட சன்னதி தெரு, கீழரத வீதி, வடக்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு காமிராக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டி.எஸ்.பி. மாயவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் காணிப்பு காமிராக்களை தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன், சப்-இன்ஸ் பெக்டர்கள் செல்வன், இசக்கி பாண்டி, தனிப்பிரிவு காவலர் ஹரி ஹரபுத்திரன், ஊர்நலக்கமிட்டி நிர்வாகிகள் ரகு, ஸ்ரீனிவாசன், ஆழ்வான், நவநீத கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ஆனந்த், சீதாலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் தங்கம் மற்றும் கோவிந்தராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மகரபூஷணம், லெட்சுமி நாராயணன மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News