உள்ளூர் செய்திகள்
மதுரை ரெயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
- சுற்றுலா பயணிகள் பெட்டி தனியாக நிறுத்து வைத்திருந்த போது தீ விபத்து
- சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்
மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் சிலிண்டர் மூலம் சமைக்க முயற்சி மேற்கொண்டபோது, சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளார்.