உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் ஆமணக்கு செடியினை பயிரிட்டுள்ளதை படத்தில் காணலாம்.

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆமணக்கு விதைகள் இருப்பு அதிகாரி தகவல்

Published On 2022-07-08 15:13 IST   |   Update On 2022-07-08 15:13:00 IST
  • ஆமணக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 1 எக்டேருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படுகிறது.
  • விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்திருந்து பெற்றுக்கொள்ளலாம்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் நடப்பு ஆண்டில் உணவு எண்ணை பயிர்களுக்கான தேசிய இயக்கத்தில் ஆமணக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 1 எக்டேருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான வீரிய ஆமணக்கு விதைகள் வேளாண்மை அறிவியல் நிலையம் நாமக்கல்லில் இருப்பு உள்ளது.

விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்திருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டம் பற்றிய விரிவான விவரங்களுக்கு பரமத்திவேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News