உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய 4 பேர் மீது வழக்கு

Update: 2022-10-07 05:50 GMT
  • வரதட்சணை கேட்டு அவரை துன்புறுத்தி வீட்டைவிட்டு அனுப்பியதால் நிலக்கோட்டை போலீசில் பெண் புகார் அளித்தார்
  • வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் மகள் பிரியங்கா(28). இவருக்கும் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியை சேர்ந்த ஜோதிபாஸ்(33) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அப்போது 10 பவுன் நகை சீர்வரிசை கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். ஜோதிபாஸ் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் தனது மனைவியிடம் தொழில் ெதாடங்க ரூ.15 லட்சம் வாங்கி வர வற்புறுத்தி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா தட்டிகேட்டுள்ளார். ஆனால் வரதட்சணை கேட்டு அவரை துன்புறுத்தி வீட்டைவிட்டு அனுப்பி விட்டார். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் பிரியங்கா புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிபாஸ், பெருமாள், மலர்கொடி,ரவீனா ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News