உள்ளூர் செய்திகள்

கல்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி விஞ்ஞானி பலி

Published On 2022-11-17 14:31 IST   |   Update On 2022-11-17 14:33:00 IST
  • திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • விபத்து நடந்ததும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

மாமல்லபுரம்:

கல்பாக்கத்தில் உள்ள அணுஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் ரமேஷ் (வயது55). இவர் கல்பாக்கம் அடுத்த அனுபுரத்தில் உள்ள அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று காலை அவர் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் அனுபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அப்போது திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஞ்ஞானி ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கல்பாக்கம் நகரியத்தில் உள்ள அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News