உள்ளூர் செய்திகள்

பாளை எம்.கே.பி.நகரில் கால்வாய் தூர்வாரும் பணியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பாளை எம்.கே.பி.நகரில் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்

Published On 2022-08-13 09:58 GMT   |   Update On 2022-08-13 09:58 GMT
  • பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது.
  • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது.

பாளை மண்டலம் 6-வது வார்டு மற்றும் 7-வது வார்டு மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் மழைநீர் செல்லக்கூடிய கால்வாயை தூர்வாரும் பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் கே.ஆர்.ராஜு, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், இந்திரா, உதவி கமிஷனர் ஜகாங்கீர் பாதுஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மனக்காவலம்பிள்ளைநகர் விரிவாக்கப்பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்கி நின்ற பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு இந்த முறை வெள்ளம் ஏற்படாமல் வடிய வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மேலப்பாளையம் குறிச்சி, மகாராஜநகர், ரெட்டியார்பட்டி தேவாலய பகுதி உள்ளிட்ட இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டது.

இந்த பணிகள் சுகாதார அலுவலர்கள் அரச குமார், சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

Tags:    

Similar News