சேதமடைந்து காணப்படும் தட்டிப்பாலம்.
சேதமடைந்த தட்டிப்பாலம் சீரமைக்கப்படுமா?
- தட்டிப்பாலம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சேதமடைந்துள்ளது.
- பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்க ண்ணபுரம் ஊராட்சி வடசாரி தெருவில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடம் தேவைகளுக்கு திருக்கண்ணபுரம் பஸ் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், சௌரிராஜ பெருமாள் கோவில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்,நூலகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சென்று வர நரிமணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தட்டிப்பாலத்தை பயன்ப டுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தட்டிப்பாலம் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சேதம் அடைந்து உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாமல் நிலை உள்ளது.
தற்போது நரிமணியாற்றில் காவிரி நீர் வந்துள்ளதால் ஆற்றைக் கடக்க முடியாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த தட்டிப் பாலத்தை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.