உள்ளூர் செய்திகள்

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2022-06-27 07:52 GMT   |   Update On 2022-06-27 07:52 GMT
  • கபிலர்மலை வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற கிராம ஊராட்சிகளில் மாற்றும் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தி னசிறுநல்லிகோவில், சுள்ளிபாளையம், குப்பிரிக்காபாளையம், வடகரையாத்தூர் மற்றும் ஆனங்கூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பு வரை ஒரு தொகுப்பாகவும் 15 முதல் 35 ஏக்கர் நிலப்பரப்பு வரை 2-வது தொகுப்பாகவும் ஏற்படுத்தப்படும். திட்டத்திற்கு தகுதியாக தேர்வு செய்யப்படும் தரிசு நிலங்கள் கிராம ஊராட்சிக்குள் இருக்க வேண்டும்.

தரிசு நில தொகுப்பின் பரப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தொகுப்பிற்கு 8 விவசாய பயனாளிகள் இருக்க வேண்டும். பயனாளிகள் அக்கிராம ஊராட்சிகளிலோ அல்லது அருகில் உள்ள கிராமங்களிலோ வசிப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்று கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News