உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மருத்துவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

Published On 2023-07-03 15:32 IST   |   Update On 2023-07-03 15:32:00 IST
  • இரவு பகல் பாராமல் வேலை செய்யும் மருத்துவர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் தான்.
  • பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.

காவேரிப்பட்டணம்,

இரவு பகல் பாராமல் வேலை செய்யும் மருத்துவர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் தான். அவர்களுடைய சேவையை பாராட்டி மருத்துவர் தினத்தை முன்னிட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், பேரூராட்சி உறுப்பினர்கள் கீதா ஞானசேகரன் , தமிழ்ச்செல்வி சோபன் பாபு, கோகுல், கிளை செயலாளர் ஈஸ்வரன் மற்றும் ஏராளமான கழக முன்னணியினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News