உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவனங்களுடன் கைகோர்க்கும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள்

Published On 2022-12-27 15:17 IST   |   Update On 2022-12-27 15:17:00 IST
  • அரசு கேபிள் இணைப்பின் மூலம் வழங்கப்படும் சேனல் சரியாக ஒளிபரப்பா கவில்லை. அடிக்கடி சர்வர் குளறுபடியும் ஏற்படுகிறது.
  • பல அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், தனியார் நிறுவனத்துடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளனர்.

தருமபுரி,

அரசு கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களுக்கு எச்.டி., பாக்ஸ் வழங்குவதில் தாமதம் செய்து வருவதால், அவர்கள் தனியார் நிறுவனங்களுடன் கைகோ ர்க்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசு, 2007-ம் ஆண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தொடங்கியது. இதற்காக மாவட்டங்கள் தோறும் பல லட்சம் செட்டாப் பாக்சுகள் வழங்கப்பட்டது.

இவை சாதாரண எச்.டி. தரம் என்பதால் பல கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து எச்.டி. தரத்தில் ஒளிபரப்பினர்.

இதனால் ஆபரேட்டர்களுக்கு அரசு சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.

தனியார் நிறுவன எச்.டி., பாக்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் எச்.டி., பாக்ஸ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கான நடவடிக்கை தாமதமாகிறது. மேலும் பல இடங்களில் அரசு கேபிள் இணைப்பின் மூலம் வழங்கப்படும் சேனல் சரியாக ஒளிபரப்பா கவில்லை. அடிக்கடி சர்வர் குளறுபடியும் ஏற்படுகிறது.

இதனால் பல அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், தனியார் நிறுவனத்துடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தற்போது பலர் அரசு கேபிள் டி.வி. குளறுபடி பிரச்னையால் முழுமையாக தனியார் நிறுவனங்களுடன் கைகோ ர்க்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தற்போது வாடிக்கையாளர்களே அரசு கேபிளில் இருந்து எச்.டி. தரத்திலான ஒளிபரப்பை விரும்புவதால் ஆபரேட்டர்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News