உள்ளூர் செய்திகள்

தாட்கோ மூலம் விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி

Published On 2023-02-05 13:31 IST   |   Update On 2023-02-05 13:31:00 IST
  • இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்ப டையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.
  • ஏ.ஏ.எஸ்.எஸ்.சி-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்ப டையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி ஏவிஷேன் அக்டாமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொட ர்புடைய நிறுவனங்களில் பயிற்சியினை அளிக்கப்ப டவுள்ளது.

இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும், கல்வித் தகுதியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியி சேர விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதமும், விடுதில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும். இப்பயிற்சினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஏ.ஏ.எஸ்.எஸ்.சி-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க ப்படும்.

இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com ல் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News