உள்ளூர் செய்திகள்

ஊத்துமலை அருகே காலாவதியான காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வியாபாரி கைது

Published On 2022-09-09 07:50 GMT   |   Update On 2022-09-09 07:50 GMT
  • மாட்டு வியாபாரியான சேகர் என்பவர் 10 மாடுகளை விலைக்கு வாங்கி உள்ளார்.
  • சேகர் வழங்கிய காசோலையை முருகன் வங்கியில் செலுத்தி உள்ளார்.

நெல்லை:

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள அண்ணாமலைபுதூரை சேர்ந்த முருகன் (வயது40). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.

மாடு விற்பனை

இவரிடம் சங்கரன் கோவிலை அடுத்த கோமதிபுரம் 1-வது தெருவை சேர்ந்த மாட்டு வியாபாரியான சேகர் என்பவர் 10 மாடுகளை விலைக்கு வாங்கி உள்ளார்.

இதற்காக ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் விலை பேசிமுடித்து முன்பணமாக ரூ. 45 ஆயிரத்தை சேகர் கொடுத்துள்ளார். மீதி பணத்திற்கு 5 காசோலைகள் மூலம் ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை நிரப்பி கொடுத்துவிட்டு 10 மாட்டை வாங்கி சென்றுள்ளார்.

மோசடி

இந்நிலையில் சேகர் வழங்கிய காசோலையை முருகன் வங்கியில் செலுத்தி உள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கு கடந்த ஆண்டே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். 

Tags:    

Similar News