உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அருகே பரபரப்பு வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
நள்ளிரவு அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல் நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 60). இவர்களது மகள், மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்
இந்நிலையில் வழக்கம்போல் சின்ன சாமி, செல்லமாள் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து சின்னசாமி மற்றும் செல்லமாளை தாக்கி அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பு ஏற்படுத்தி உள்ளது.