உள்ளூர் செய்திகள்

கனிமொழி எம்.பி.யை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி சந்தித்து கோரிக்கை மனு வழங்கியபோது எடுத்தபடம்.

ஆழ்வார்திருநகரி வழியாக புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் - கனிமொழி எம்.பி.யிடம் வேண்டுகோள்

Published On 2022-11-30 08:21 GMT   |   Update On 2022-11-30 08:21 GMT
  • ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மனு கொடுத்தார்.
  • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கிராமப்புறங்களில் உள்ளது போல நகர்ப்புறங்களிலும் அனைத்து பயிற்சிகளையும் வழங்கிட வேண்டும்'

தென்திருப்பேரை:

உடன்குடி மற்றும் சாத்தான்குளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்ரீவைகுண்டம் சுற்றி செல்லாமல் ஆழ்வார்திருநகரி, காடுவெட்டி, குலசேகரநத்தம், ஆயத்துறை வழியாக தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க கனிமொழி எம்.பி. யிடம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மனு கொடுத்தார். இந்த புதிய வழித்தடம் நடைமுறைக்கு வந்தால் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களின் பயண நேரம் கணிசமாக குறைவது மட்டும் இன்றி இந்த சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள் என்பதை வலியுறுத்தியதாக கூறினார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கிராமப்புறங்களில் உள்ளது போல நகர்ப்புறங்களிலும் அனைத்து பயிற்சிகளையும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்ததாக கூறினார்.

Tags:    

Similar News