உள்ளூர் செய்திகள்
பஸ்நிலையத்தில் மேற்கூரை சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்.
நத்தம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
- நத்தம் பழைய பேருந்து நிலையத்திற்குள் உள்ள மொபைல் கடைகள் செயல்பட்டு வரும் பகுதியில் திடீெரன மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
- இதில் பயணி ஒருவருக்கு தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நத்தம்:
நத்தம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பல்வேறு வணிக வளாக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்திற்குள் உள்ள மொபைல் கடைகள் செயல்பட்டு வரும் பகுதியில் திடீெரன மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த வழியாக சென்ற குடகிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகர்சாமிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதில் அவர் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதைப்போலவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நத்தம் பழைய பேருந்து நிலையத்திற்குள் ஒரு பேன்சி மற்றும் சலூன் கடையில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது.