உள்ளூர் செய்திகள்

சங்கராபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு

Published On 2022-12-26 07:22 GMT   |   Update On 2022-12-26 07:22 GMT
  • காசிராமன் சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
  • யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாக ராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராமன் (வயது 40). சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் தியாகராஜபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த காசிராமன் வீட்டை திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன.

அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 வெள்ளி குத்து விளக்கு உட்பட வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காசிராமன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

Similar News