உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் உள்ள ஒரு பங்கில் கேனில் பெட்ரோல் நிரப்பபட்ட காட்சி.

கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விடும் பங்க் உரிமையாளர்கள்

Published On 2022-09-27 07:35 GMT   |   Update On 2022-09-27 07:35 GMT
  • பெட்ரோல் பங்குகளிலும் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என்று உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
  • கலெக்டர் உத்தரவுக்கு பிறகும் இதுபோன்ற சம்பவம் ெதாடர்ந்து பல்வேறு பங்குகளிலும் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் மண்எண்ணை கேன்களில் தீ வைத்து சில அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது வீசுவது தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலும் பா.ஜ.க. நிர்வாகியின் வாகன குடோனுக்கு தீ வைப்பு சம்பவம் நடந்தது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ேரால் பங்குகளிலும் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என்று உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கேன்களில் பெட்ரோல் வழங்கப்பட்டது. கலெக்டர் உத்தரவுக்கு பிறகும் இதுபோன்ற சம்பவம் ெதாடர்ந்து பல்வேறு பங்குகளிலும் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News