உள்ளூர் செய்திகள்

முக்கோண பூங்காவை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளதை படத்தில் காணலாம்.

பரமத்திவேலூரில் கட்டப்பட்டமுக்கோண பூங்காவை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

Published On 2023-03-20 09:40 GMT   |   Update On 2023-03-20 09:40 GMT
  • பழைய பை-பாஸ் சாலையில் அரிமா சங்கம் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முக்கோண பூங்கா கட்டப்பட்டது.
  • அதில் உயரமான மின்கம்பங்கள் அமைத்து 4 புறமும் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூருக்குள் நுழையும் இடத்தில் பழைய பை-பாஸ் சாலையில் அரிமா சங்கம் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முக்கோண பூங்கா கட்டப்பட்டது.

அதில் உயரமான மின்கம்பங்கள் அமைத்து 4 புறமும் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பூச்செடிகளை வைத்து பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்களால் இந்த முக்கோண பூங்கா உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அதில் இருந்த ஒரு பகுதி இரும்பு கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பூங்காவின் சுவற்றை இடித்து, அதில் இருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சுவற்றை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த சுவற்றை பரமத்திவேலூர் அரிமா சங்க நிர்வாகிகள் கட்டித்தர முன் வரவேண்டும் என்றனர்.

இது குறித்து வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில் சேதப்படுத்தப்பட்ட முக்கோண பூங்கா பற்றிய தகவல் கிடைத்தவுடன் பார்த்து வந்தோம். இரும்பு கம்பியை திருடிய மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்படும் என்றனர்.

Tags:    

Similar News