உள்ளூர் செய்திகள்

மானூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

Published On 2023-05-02 14:50 IST   |   Update On 2023-05-02 14:50:00 IST
  • அருண்பிரசாத் தூத்துக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
  • நேற்றிரவு அருண்பிரசாத் சொந்த ஊரான கானார்பட்டிக்கு சென்றுள்ளார்.

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 42). இவர் தூத்துக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கானார்பட்டியில் உள்ள வீட்டில் இவரது தாய் மற்றும் தங்கை வசித்து வந்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 29-ந்தேதி திருச்சியில் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு அருண்பிரசாத் சொந்த ஊரான கானார்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 2 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இது குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News