உள்ளூர் செய்திகள்

பெரிய வெங்காயம் வரத்து200 டன்னாக அதிகரிப்பு

Published On 2023-02-20 15:39 IST   |   Update On 2023-02-20 15:39:00 IST
  • இந்தியாவில் மகா ராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவில் வெங்காயம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
  • கடந்த ஆண்டு பெய்த மழையால் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெரிய வெங்காயம் அமோக விளைச்சலை தந்துள்ளது.

சேலம்:

இந்தியாவில் மகா ராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவில் வெங்காயம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பெரிய வெங்காயம் சாகுபடி நடக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெரிய வெங்காயம் அமோக விளைச்சலை தந்துள்ளது. அதனால் வட மாநிலங்களில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை சரிவடைந்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், மகாராஷ்டிரா, கர்நா டக மாநிலங்களில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் பெரிய வெங்காயம் சாகுபடி நடைபெறுகிறது.

இங்கிருந்து இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கு ெபரிய வெங்காயம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 15-ந்தேதிக்கு பிறகு வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அறுவடை தீவிரம் அடைந்துள்ளது.

இதனால் அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 200 டன் பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் பெரிய வெங்காயத்தை சில்லரை வியாரிகள் வாங்கி சென்று கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர். பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து ள்ளதால் கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.

Tags:    

Similar News