பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனியில் இன்று வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
- மிகவும் பழமை யான இந்த கோவில் பழனி முருகன் கோவிலில் உப கோவிலாகும். இங்கு சனி க்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
- விழாவை யொட்டி தினசரி காலை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பழனி:
பழனி பாலசமுத்திரத்தில் அேகாபில வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை யான இந்த கோவில் பழனி முருகன் கோவிலில் உப கோவிலாகும். இங்கு சனி க்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அப்போது பழனி பாலசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்த ர்கள் திரளாக வந்து தரி சனம் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி தினசரி காலை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவில் அனுமார், பவளக்கால், கருடன், ஷேசவாகனங்களில் பெருமாள் பவனி வருகிறார். தினசரி மாலையில் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் 7வது நாளான 1ம் தேதி மாலை 5 மணிக்குமேல் அகோபில வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோ ட்டம் 3ம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு தேரேற்றம், 7.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், அதனை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.