சிறுவன் அடித்துக் கொலை: கைதான தாய்-மகன் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு
- இரவு 11 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற முருகேசனை பிரபு வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினார்.
- முருகேசனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள பாலேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது ராம்நகர். இந்த ஊரை சேர்ந்தவர் குப்புசாமி. தூய்மை பணியாளர். இவரது மகன் முருகேசன் (வயது 17). கூலித்தொழிலாளி. இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பிரபு (27). இவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராம்நகரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அந்த நேரம் 2 குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரவு 11 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற முருகேசனை பிரபு வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் கீழே விழுந்த முருகேசனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார்.
இந்த கொலை தொடர்பாக பர்கூர் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குபதிவு செய்து பிரபு, அவரது அண்ணன் திருப்பதி, தாய் பொட்டு அம்மாள் ஆகியோரை கைது செய்தார். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.