அரசு பள்ளியில் புத்தக கண்காட்சி-இந்து முன்னணி எதிர்ப்பு
- புத்தக கண்காட்சியை நடத்தும் பதிப்பகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தது.
- புத்தக கண்காட்சியை அரசு பள்ளியில் நடப்பதை தடை செய்ய வேண்டும்.
திருப்பூர் :
இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தக கண்காட்சியை நடத்தும் ஒரு பதிப்பகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தது. இப்பதிப்பகம் நடத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகம் துணை போவது ஏற்புடையதாக இல்லை.
பள்ளி வளாகத்திற்குள் வியாபார நோக்கத்துடன், பொருள் விற்பனை செய்வது சட்ட விரோதம். இது, மாணவர்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் மைதானம் இப்புத்தக கண்காட்சியால் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும். இதனை கருத்தில் கொண்டு, புத்தக கண்காட்சியை அரசு பள்ளியில் நடப்பதை தடை செய்ய வேண்டும். இல்லாவிடில் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.