உள்ளூர் செய்திகள்

புனித அந்தோணியார் தேர் திருவிழா நடைபெற்ற காட்சி.

பொம்மிடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் தேர் திருவிழா

Published On 2023-06-14 14:23 IST   |   Update On 2023-06-14 14:23:00 IST
  • ஆடம்பர தேர் பல ஆயிரக்கணக்கான பக்தர்க ளுக்கு மத்தியில் பொம்மி டியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம், வான வேடிக்கையுடன் தேர் தூக்கிச் செல்லப்பட்டது.
  • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

பாப்பிரெட்டிப்பட்டி, 

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கோடி அற்புதர் புனித அந்தோனியார் திருத்தலம் மிகவும் பிரபலமானது.

இந்த ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கர்நாடகம், கோவா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் கிறிஸ்தவ பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 4-ம்தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் போப்பாண்டவருக்கு அடுத்தபடியாக இருக்கும் இந்தியாவின் பிரதிநிதி ஆண்டனி புலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நாடகம், கலை நிகழ்ச்சி, திருப்பலி, ஆன்மீக பணி என கொண்டாடப்பட்டது.

விழாவின் முடிவு நாளான நேற்று தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

இறுதி நிகழ்ச்சியாக மாலை 7 மணி அளவில் ஆலங்கரிக் கப்பட்ட ஆடம்பர தேர் பல ஆயிரக்கணக்கான பக்தர்க ளுக்கு மத்தியில் பொம்மி டியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம், வான வேடிக்கையுடன் தேர் தூக்கிச் செல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ், ஊர் தலைவர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News