உள்ளூர் செய்திகள்

போடி மெட்டு மலைச்சாலையில் உருவான நீர் வீழ்ச்சியை படத்தில் காணலாம்.

போடி மெட்டு மலைச்சாலையில் மழையால் உருவான நீர்வீழ்ச்சிகளால் குதூகலம்

Published On 2022-11-16 07:12 GMT   |   Update On 2022-11-16 07:12 GMT
  • பருவமழை காரணமாக மலைச்சாலை யின் ஓரங்களில் ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சி கள் புதிதாக உருவாகி யுள்ளன.
  • இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தமிழக-கேரள எல்லை பகுதியை இணைக்கும் முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலை இருந்து வருகிறது. இந்த மலை ச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன.

மேலும் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்த லமாக உள்ள மூணாறுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் போடி மெட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் போடி மெட்டு பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மலைச்சாலை யின் ஓரங்களில் ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சி கள் புதிதாக உருவாகி யுள்ளன. மலைச்சாலை வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணி கள் இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் போடி மெட்டு மலைச் சாலையில் பனி மூட்டங்களுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்த வாறு செல்கின்றனர்.

Tags:    

Similar News