உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம் நடைபெற்றதையும், ராஜகிரி பவுண்டேசன் இயக்குனர் ராமையா சான்றிதழ் வழங்கியதையும் படத்தில் காணலாம்.

ராஜகிரி பவுண்டேசன் சார்பில் ரத்ததான முகாம் - சிறப்பு மருத்துவ முகாம்

Update: 2022-06-25 10:32 GMT
  • நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் புனித ரஞ்சிதம் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
  • நிர்வாக இயக்குனர்கள் ராமையா, பரமசிவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நெல்லை:

ராஜகிரி பவுண்டேஷன் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து 6-வது வருட ரத்ததான முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நெல்லை மாநகராட்சி அருகில் உள்ள ராஜகிரி பவுண்டேஷன் அலுவலகத்தில் நடத்தியது.

நிர்வாக இயக்குனர்கள் ராமையா, பரமசிவன் ஆகியோர் தலைமை தாங்கினர். உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் புனித ரஞ்சிதம் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ராஜகிரி பவுண்டேஷனின் ஊழியர்கள், விற்பனை பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

Tags:    

Similar News