உள்ளூர் செய்திகள்

வெள்ள நீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு- பழங்குடி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பாஜக

Published On 2022-11-04 15:47 IST   |   Update On 2022-11-04 15:47:00 IST
  • மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் பாஜகவினர் நேரில் பார்வையிட்டனர்
  • நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்

பொன்னேரி

பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக செஞ்சி அம்மன் நகர் பழங்குடியினர் கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது. பாதிக்கப்பட்ட கிராமத்தை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் பாஜகவினர் நேரில் பார்வையிட்டனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் மதிய உணவுகள் வழங்கினர்.

பாஜக நிர்வாகிகள் அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரவீன் குமார், பொன் பாஸ்கர், நீலகண்டன், பெருமாள், நந்தன், கோட்டி, ரமேஷ், பிரசன்னா, மீஞ்சூர் சிவராஜ், பழவேற்காடு நிர்வாகிகள் பெருமாள், முக்தா, மகாலட்சுமி, செஞ்சி அம்மன் நகர் டி.கே.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News