உள்ளூர் செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகிகள் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பா.ஜ.க. நிர்வாகிகள் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு

Published On 2022-09-27 09:53 GMT   |   Update On 2022-09-27 09:53 GMT
  • இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • காரணம் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சீர்காழி :

தமிழகத்தில் கோவையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் தென் பாதி வ.உ.சி தெருவில் வசிக்கும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், திருவெண்காடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரது இல்லங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு காவலர் என இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரம் போலீஸ் ஒன்று பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் தேவை இன்றி உரிய காரணங்கள் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சீர்காழி பகுதியில் பெட்ரோல் பங்குகளில் கேன்கள் மற்றும் பாட்டில்களில் சில்லரை பெட்ரோல் விற்பனை செய்ய காவல்துறை தடை செய்து அறிவித்துள்ளது.

இதனால் பெட்ரோல் நிலையங்களில் சில்லறை பெட்ரோல் விற்பனை இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News