உள்ளூர் செய்திகள்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி: ரூ.94 லட்சம் வசூல்

Published On 2023-09-28 06:58 GMT   |   Update On 2023-09-28 06:58 GMT
  • கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
  • வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

விழுப்புரம்:

மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் செலுத்தப்படும் காணிக்கைகளை ஒவ் வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவா னந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வர் சங்கீதா, அறங்கா வலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இதில் 94 லட்சத்து 42 ஆயிரத்து 622 ரூபாய் ரொக்கமும், 315 கிராம் தங்க நகைகளும், 1,110 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த பணியின்போது அறங்காவலர்கள் பூசாரிகள் தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடி வேல், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழி யர்கள், ஆகியோர் உடனி ருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

Tags:    

Similar News