உள்ளூர் செய்திகள்

இருதரப்பினர் மோதல்; 4 பேர் ைகது

Published On 2023-01-19 16:02 IST   |   Update On 2023-01-19 16:02:00 IST
  • அதே பகுதியை சேர்ந்த ரமணி, முரளி, கணபதி ஆகியோருக்கும் இடையே பொங்கல் தினத்தன்று வழுக்கு மரம் ஏறும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
  • ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள காமராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமிகண்ணு (வயது34). டிரைவரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமணி, முரளி, கணபதி ஆகியோருக்கும் இடையே பொங்கல் தினத்தன்று வழுக்கு மரம் ஏறும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.

இது குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து சாமிகண்ணு, ரமணி, கணபதி, முரளி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News