உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து வளர்ச்சி திட்டபணிகளை தொடங்கி வைத்த காட்சி.

காவேரிப்பட்டணத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

Published On 2023-07-04 15:10 IST   |   Update On 2023-07-04 15:10:00 IST
  • 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு நேற்று பூமிபூஜை நடந்தது.
  • கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் காந்திநகரில், ரூ.32.18 லட்சம், காந்தி நகரில், 6.64 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க திட்டத்தில் தார்சாலை, மற்றும் மிட்டஹள்ளி புதூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அருகில், 15-வது நிதிக்குழு மானியத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு நேற்று பூமிபூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் தேங்காய் சுப்பிரமணி, மகேந்திரன், ஒன்றியகுழு துணை தலைவர் சசிகலா தசரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுரேஷ், அம்மு பழனி, பார்வதி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேம் முதல் மலைசந்து வரையில், 8 கி.மீ., அளவில் கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News