உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் சாலை அமைக்க பூமிபூஜை

Published On 2023-07-18 14:03 IST   |   Update On 2023-07-18 14:03:00 IST
  • தானம்பட்டி முதல் கங்கலேரி வரை ரூ.30 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது.
  • பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் கொண்டேப்பள்ளி முதல் சின்னதானம்பட்டி வரை, கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 31 லட்சத்து 7ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது. அதே போல், கொண்டேப்பள்ளி ஊராட்சி தானம்பட்டி முதல் கங்கலேரி சாலை வரை 30 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது.

இந்த சாலை பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News