உள்ளூர் செய்திகள்

களர்பதி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

Published On 2023-09-05 15:47 IST   |   Update On 2023-09-05 15:47:00 IST
  • ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை செய்து பணி களை தொடக்கி வைத்தார்.

 மத்தூர்,  

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் , களர்பதி ஊராட்சியை சேர்ந்த கொத்தக்கோட்டை விநாயகர் கோவில் தெருவில், 15-வது நிதி மானிய குழுவில் இருந்து ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் 240 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை செய்து பணி களை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், தர்மகர்த்தா தங்கராஜ், முன்னாள் தர்ம கர்த்தா கோவிந்தன், ராஜப்பன் நாயுடு, ஒப்பந்த தாரர் கணேஷ்குமார், தகவல் தொழில் நுட்பவு பிரிவு பூபதி, பொன்னுசாமி, சக்திவேல், ஞானவேல், சம்பத், பிரவின், சிலம்பசரன், ஊராட்சி செயலர் சரவணன் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News