உள்ளூர் செய்திகள்
காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன்.
பக்தா்குளம் மாரியம்மன் கோவில் ஆண்டு பெருவிழா
- காவடி எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
- கோவிலை சுற்றி அம்மன் வீதிஉலா காட்சி நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபக்தா் குளம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து முதல் நாள் பயத்தவரன்காடு கிராமவாசிகளால் வேதாரண்யேஸ்வரர் கோவிலிருந்து வண்ண மலர்களும், மின் விளக்குகளும் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சென்றடைந்தது.
அதன் பின்னர் காவடி எடுத்து வரப்பெற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் கோவிலை சுற்றி அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பயத்தவரன்காடு கிராம தலைவர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். இதில் கோவில் ஆதின வித்வான் கேசவன் குழுவினர் நாதஸ்வர இன்னிசையும், கேரள செண்டை மேளம், வான வேடிக்கையும் நடந்தது.