உள்ளூர் செய்திகள்

விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இருந்து தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் மற்றும் மேலநீலிதநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் கவிதா ஆகியோர் பெற்றுக் கொண்ட காட்சி.


பாண்டியாபுரம் ஆரம்ப பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது - கிராம மக்கள் மகிழ்ச்சி

Published On 2022-12-05 08:34 GMT   |   Update On 2022-12-05 08:34 GMT
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படும் 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.
  • சிறந்த பள்ளிகளுக்கான 2021 - 2022-ம் கல்வி ஆண்டிற்கான விருது மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பாண்டியாபுரம் ஆரம்ப பள்ளிக்கு வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

தமிழக அரசின் தொடக்க கல்வித்துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படும் 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த பள்ளிகளுக்கான 2021 - 2022-ம் கல்வி ஆண்டிற்கான விருது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு வழங்கப்பட்டது.

விருதினை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வி ஆணையர் நந்தகுமார், சென்னை மேயர் பிரியா, இல்லம் தேடி கல்வி இயக்குனர் இளம்பகவத், ஆகியோரி டமிருந்து பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் மற்றும் மேல நீலிதநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் கவிதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது குறித்து பாண்டியாபுரம் கிராம மக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News