உள்ளூர் செய்திகள்
விளைச்சல் அதிகரிப்பால்சேலத்துக்கு நிலக்கடலை வரத்து அதிகரிப்பு
- சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது.
- கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொங்கலுக்கு பிறகு நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது விவசாயிகள் பள்ளப்பட்டி வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கும், லீபஜார் மார்க்கெட்டுக்கும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு வரும் நிலக்கடலையை எண்ணெய் உரிமையாளர்கள், திண்பண்டம், பலகார உற்பத்தியாளர்கள் வந்து ஏலம் எடுத்துச் செல்கின்றனர். வரத்து அதிகரித்து வருவதால், விற்பனை நன்றாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.